9-வது மாடியிலிருந்து குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சாவித்திரி தேவி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி கடந்த இரண்டு வருடங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மூதாட்டி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது நோய் குணமடையவில்லை. இதனையடுத்து தனக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனதை நினைத்து மன உளைச்சலில் இருந்த மூதாட்டி கடிதம் எழுதி வைத்துவிட்டு தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 9-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த சாவித்திரி தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.