மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் பச்சையம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டிக்கு கடந்த சில மாதங்களாக இடுப்பு வலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அந்த மூதாட்டி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.