Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மிரண்டு ஓடிய மாடு… முட்டி தூக்கிய கொடூரம்…. மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்…!!

வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த மூதாட்டியை மாடு முட்டியதால் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள நேருஜி நகரில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவேரி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டின் வெளியே உள்ள வராண்டாவில் அமர்ந்திருந்தபோது அரியமங்கலம் குவளகுடியில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் அந்த வீதியில் மாட்டு வண்டியை ஓட்டி வந்துள்ளார். அப்போது திடீரென மிரண்டு ஓடிய மாடு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த காவேரியை முட்டித் தள்ளியது.

இதனையடுத்து பலத்த காயமடைந்த அம்மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மூதாட்டிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூதாட்டியின் இறப்பிற்கு காரணமான அந்த மாட்டு வண்டியை ஓட்டி வந்த கார்த்திக் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |