Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூரில் வீட்டில் விளக்கு ஏற்றும் போது கற்பூரம் தவறிவிழுந்து சேலை தீப்பற்றியதில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சன்னதி தெருவில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்தார். இவர் புரோகிதராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தர்மாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ராமமூர்த்தி என்ற மகன் உள்ளார். ராமமூர்த்தி குரும்பலூர் பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.

பாலசுப்ரமணியன் சில வருடங்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து தர்மாம்பாள் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமமூர்த்தி ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த தர்மாம்பாள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி, பின் கற்பூரம் ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கற்பூரம் தவறி சேலையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதனால் தர்மாம்பாளுக்கு மோசமாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தர்மாம்பாளை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தர்மாம்பாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

Categories

Tech |