Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வைக்கோல் எடுக்க சென்ற மூதாட்டி…. கோசாலையில் நடந்த சம்பவம்…. நெல்லையில் சோகம்…!!

மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரையிருப்பு வடக்கு பள்ளிக்கூடத்தில் சீனியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அருகில் இருக்கும் கோவில் கோசாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாடுகளுக்கு வைக்கோல் எடுப்பதற்காக அங்குள்ள இரும்பு கதவை திறந்த போது மூதாட்டியின் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. அப்போது அலறி சத்தம் போட்ட மூதாட்டியை காப்பாற்றுவதற்காக சென்ற சின்னதுரை என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்துவிட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக சீனியம்மாள் மற்றும் சின்ன துரையை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சீனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் செல்லத்துரைக்கு மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |