70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சைக்கோ வாலிபர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவில் அருகில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் பலத்த காயங்களுடன் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் மூலமாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மூதாட்டியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தும் போது, அந்த மூதாட்டி திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
அதன்பின் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது மர்ம வாலிபர் ஒருவர் அந்த மூதாட்டியின் கையைப் பிடித்து இழுத்துச் செல்வதும், ஒரு மணி நேரம் கழித்து அங்கிருந்து வெளியேறுவதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மூதாட்டி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் அந்த வாலிபர் மூதாட்டியை கற்பழித்து விட்டு தலையில் கல்லை போட்டு விட்டு தப்பித்துள்ளார் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். ஆனால் போலீசாரின் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவதற்காக அந்த மூதாட்டியின் ரத்த மாதிரியை ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.