சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தட்டு மேட்டு தெருவில் சுப்புத்தாய் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நோய்க் கொடுமை அதிகமாக இருப்பதால் உயிரோடு இருப்பதை விட இறப்பதே மேல் என்று தனது மகளிடம் கூறிய இந்த மூதாட்டி திடீரென வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த மகள் தனது தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.