Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த துர்நாற்றம்… காவல்துறையினர் கண்ட காட்சி… அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்…!!

பூட்டிய வீட்டிற்குள் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் முப்பிடாதி என்பவர் வசித்து வருகிறார். இவர் இளையரசனேந்தல் ரோட்டில் இருக்கும் தனியார் கண் மருத்துவமனையில் தோட்ட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென முப்பிடாதியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முப்புடாதி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |