Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அது மேல விழுந்திட்டாங்க…. உயிருக்கு போராடிய மூதாட்டி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மின்சார வேலியின் மீது விழுந்ததால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகளை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக தோட்டத்தை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் குமாரின் தோட்டம் வழியாக ஜீவா நகர் பகுதியில் வசித்த ஜானகி என்ற மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது கால் தவறி அந்த வேலி மீது விழுந்ததால் ஜானகி மீது மின்சாரம் பாய்ந்து விட்டது.

இதனை அடுத்து படுகாயமடைந்த ஜானகியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜானகி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |