மூதாட்டி மண்ணெண்ணை விளக்கை பற்ற வைக்க முயன்றபோது அவரது உடலில் தீப்பற்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீலக்காம்பட்டியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாயம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டதால் தாயம்மாள் மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைக்க முயன்றார். அப்போது அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனையடுத்து அவரது உடல் முழுவதும் தீ மளமளவென பரவி விட்டது.
இதனால் சாயம்மாள் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகயமடைந்த அவரை மீட்டு, பின் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.