சமையல் செய்து கொண்டிருக்கும் போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூர் பகுதியில் ராஜேஸ்வரி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி தனது வீட்டில் இருக்கும் விறகு அடுப்பில் சமைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவரின் சேலையில் தீப்பற்றி உள்ளது. இதனை அடுத்து தீயானது உடல் முழுவதும் பரவி விட்டதால் வலி தாங்க முடியாமல் ராஜேஸ்வரி அலறி சத்தம் போட்டுள்ளார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று படுகாயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.