Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஓசி டிக்கெட் வேண்டாம்” பணத்தை வாங்குமாறு அடம் பிடித்த மூதாட்டியால் பரபரப்பு….. வைரலாகும் வீடியோ….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து பாலத்துறையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் வால்பாறையில் வசிக்கும் வினித் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் குரும்பபாளையம் பகுதியில் வசிக்கும் 70 வயது மூதாட்டியான துளசியம்மாள் என்பவர் பேருந்தில் ஏறி பாலத்துறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனால் இலவச டிக்கெட்டை கண்டக்டர் துளசியம்மாளிடம் கொடுத்துள்ளார். அப்போது மூதாட்டி கண்டக்டரரிடம் பணம் கொடுத்துள்ளார். உடனே கண்டக்டர் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். எனவே பணம் தர வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

ஆனால் மூதாட்டி விடாப்பிடியாக தொடர்ந்து கண்டக்டரிடம் நான் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன் எனவும், பணம் இல்லாமல் தரும் டிக்கெட் எனக்கு வேண்டாம் எனவும் கூறி அடம் பிடித்துள்ளார். மீண்டும் மீண்டும் நான் பிரீயா பேருந்தில் பயணிக்க மாட்டேன் எனக் கூறி அடம்பிடித்த துளசியம்மாளிடம் இருந்து கண்டக்டர் பணத்தை வாங்க மறுத்தார். ஆனால் வலுக்கட்டாயமாக மூதாட்டி கண்டக்டரின் கையில் பணத்தை திணித்துள்ளார். இதனால் வேறு வழி இல்லாமல் கண்டக்டர் படத்தை வாங்கிக் கொண்டு மீதி சில்லறையை துளசியம்மாளிடம் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |