70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் நகை மற்றும் பணத்தை திருடி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் 70 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 16ஆம் தேதி வீட்டில் மூதாட்டி தனியாக இருக்கும் போது மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கம்மல், மூக்குத்தி போன்ற 2 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போனை திருடியதோடு அவரை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து துடியலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஆனைக்கட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேவுகம்பட்டி பகுதியில் வசித்து வரும் கருப்பையா என்பதும், நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.