நோயல் அவதிப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் காலனி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் பிச்சையம்மாளுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக பல இடங்களுக்கு சென்று பிச்சையம்மாள் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆனால் சிறுநீரக நோய் குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த பிச்சையம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிச்சையம்மாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.