கொரோனாவை வென்ற காதல் தம்பதியினர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த மதனகோபால் என்ற 76 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உள்ளிட்ட பாதிப்புகளும் இருந்துள்ளது. முதியவருக்கு உறுதி செய்யப்பட்டதும் அவரை அழைத்துச் செல்வதற்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ ஊழியர்கள் வந்திருந்தனர். இதையடுத்து அவரது 66 வயது மனைவி லலிதா அவரை தனியாக அனுப்பாமல், நான் உன்னுடன் வருகிறேன் என்று கூறி மருத்துவரின் அனுமதி பெற்று கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முதியவரின் உடனிருந்து அவரை கவனித்து கொரோனாவிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.
10 நாட்களுக்கு பின் முதியவருக்கும் அவரது மனைவி லலிதாவுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மருத்துவமனை சார்பில் உறுதி செய்யப்பட்டபின், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த செய்தி தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான பாராட்டையும், நம்பிக்கையையும் தம்பதிக்கு பெற்றுத்தந்தது. இந்நிலையில் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லும் சமயத்தில் அவரது மனைவியும், முதியவரும் பேசிய வார்த்தைகள் சில தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால், முதியவரை மருத்துவ ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக கூட்டிச் செல்லும்போது அவரது மனைவியும் உடன் கிளம்பியுள்ளார்.