Categories
உலக செய்திகள்

“வேற லெவல்!”…. 70 வருஷமா லீவ் எடுக்காம வேலைக்கு போகும் தாத்தா….!!!

இங்கிலாந்தில் வசிக்கும் 83 வயது முதியவர் 70 வருடங்களாக மருத்துவ விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வந்திருக்கிறார்.

இங்கிலாந்தில் 83 வயது முதியவரான பிரெய்ன் சோர்லே, கடந்த 70 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். பிரெய்ன், கடந்த 1953-ஆம் வருடத்தில், 15 வயது சிறுவனாக இருந்தபோது, சோமர்செட் பகுதியில் இருக்கும், ஷூ நிறுவனம் ஒன்றில் பகுதி நேரமாக பணிக்கு சேர்ந்திருக்கிறார்.

வாரத்திற்கு சுமார் 45 மணி நேரங்கள் பணியாற்றும் இவருக்கு, 2 பவுண்டு ஊதியம் வழங்கப்பட்டது. குடும்பம் வறுமையில் வாடியதால், வேறு வழியின்றி அங்கேயே முழுநேர வேலை பார்த்திருக்கிறார். அதன் பின்பு அந்த நிறுவனம் கடந்த 1993ஆம் வருடத்தில் ஷாப்பிங் மாலாக மாற்றப்பட்டது.

அதன்பின்பு, அங்கு பணியாற்றி வந்திருக்கிறார். சுமார் 8 வருடங்களுக்கு முன் அவரின் மனைவி  மாயமானார். எனவே, வீட்டில் தனியாக இருப்பதற்கு பிடிக்காததால், 83 வயதான பிறகும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதில் ஆச்சரியமாக, அவர் 70 வருடங்களாக ஒருநாள் கூட எந்த காரணங்களுக்காகவும் விடுப்பு எடுத்தது இல்லையாம்.

Categories

Tech |