தென்கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் கொசோவோ என்னும் நாட்டில் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த பின் அரியவகை நோய் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொசோவோ நாட்டில் ஹெர்னியா சிகிச்சை மேற்கொள்வதற்காக 67 வயது முதியவர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். எனவே, மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனை செய்துவிட்டு அறுவை சிகிச்சை செய்தார்கள். சிகிச்சை முடிந்த பின் அவருக்கு Persistent Mullerian duct syndrome என்ற அரிய வகை நோய் இருந்ததை, கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.
அதாவது கடந்த 10 வருடங்களுக்கு முன் அவரின் தொடைப்பகுதி வீங்கியிருக்கிறது. பரிசோதனை மேற்கொண்ட பின், குடலிறக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அதனை அவர் அப்படியே விட்டுவிட்டார். எனினும், அவர் அதிக கோபப்படும் போதும், இருமல் வரும் போதும், எழுந்து நிற்கும் சமயங்களிலும் அந்த வீக்கம் பெரிதாக இருந்திருக்கிறது.
ஆனால், படுத்திருக்கும் போது வீக்கம் இல்லை என்று தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், தான் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்பு தான், அவர் Persistent Mullerian duct syndrome என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர் பிறக்கும் போதே விதைப்பையில் ஒரு விதை மட்டும் இருந்திருக்கிறது.
இந்நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின், அவருக்கு வீக்கம் இருந்த இடத்தில் மற்றொரு விதைப்பையும், அதனுடன் சேர்ந்து பெண்ணுறுப்பும் இருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ந்தனர். இதனை மருத்துவ உலகில் PMDS என்று கூறுவார்கள். தற்போது வரை 200 நபர்கள் மட்டும் தான் இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.