70 வயது முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கோட்டை கிராமத்தில் சுந்தரம் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சுந்தரம் அதே பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து முதியவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். தற்போது சுந்தரத்திற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.