Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்த செயல்….. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அத்தனாரிபாளையம் பகுதியில் வசிக்கும் பெருமாள் என்ற முதியவர் இந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெருமாளை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |