8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில்லாங்காட்டுப்புதூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அதே பகுதியில் வசித்த 8 வயது சிறுமியை தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பிறகு சங்கர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுதபடி கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.