சிங்கப்பூரில் இருக்கும் லிட்டில் இந்தியா நகரத்தை சேர்ந்த மூர்த்தி நாகப்பன் என்ற நபர் பேருந்தில் மதுபோதையில் தகராறு செய்ததால் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த மூர்த்தி நாகப்பன்(65), என்பவர் இந்திய வம்சாவளியினர். இவர், மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறி இருக்கிறார். மேலும், முகக்கவசத்தை சரியாக அணியவில்லை. எனவே ஓட்டுனர் அவரிடம் சரியாக முககவசத்தை அணியுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால், மூர்த்தி நாகப்பன் கோபமடைந்து, ஓட்டுனரை மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.
எனவே பயணிகள் அவரிடம் தட்டிக் கேட்ட போது, அவர்களையும் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். பேருந்து ஓட்டுனர், இது குறித்து புகார் தெரிவித்ததில், காவல்துறையினர் அவரை கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் இதற்கு முன்பு இரண்டு தடவை, இதேபோல் மது அருந்திவிட்டு பேருந்தில் தகராறு செய்திருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது.
எனவே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் மீதான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 5 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.