Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பாதிரியார் செய்யும் வேலையா….? காவல் துறையின் அதிரடி நடவடிக்கை….!!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ் லைன் நேதாஜி நகரில் பாதிரியாரான கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலையில் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துதாஸ் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெபக்கூடம் நடத்துவதற்காக ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த வீட்டிலிருந்த 11 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியான தொல்லையை கொடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமி தனது தாயாரிடம் பாதிரியாரை பற்றி தெரிவித்துள்ளார். அதன்பிறகு சிறுமியின் தாயார் காவல் நிலையத்திற்கு சென்று பாதிரியார் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிறிஸ்துதாஸ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |