Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதுனா ரொம்ப பிடிக்கும்…. நிறைவேறாத விருப்பம்… நிராகரித்த குடும்பத்தினர்… முதியவரின் சோகமான முடிவு…!!

தனது ஆசையை மனைவி மற்றும் மகன்கள் நிராகரித்ததால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கீழே அரியப்பபுரம் அம்மன் கோவில் தெருவில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக பசு மாடு வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால் அவரது மனைவி மற்றும் மகன்கள் இதனை ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த தங்கபாண்டி தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தங்கபாண்டியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு தங்கப்பாண்டி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் தங்க பாண்டி பரிதாபமாக இறந்துவிட்டார்.

Categories

Tech |