Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இது யாருன்னு தெரியலையே… பஸ் ஏற சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… நாமக்கல்லில் பரபரப்பு…!!

பேருந்து நிறுத்தத்தில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெப்படை போலீசாருக்கு பச்சாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த முதியவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த முதியவரின் விவரம் குறித்தும், அவர் எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |