ரயில் நிலையத்தில் முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் ரயில் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.