வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டின் மாடியில் துணி காய வைத்ததை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்ததும் உறவினர்கள் சேகரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சேகரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.