Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மகனுடன் சென்ற முதியவர்…. திடீரென நேர்ந்த சம்பவம்…. கரூரில் நடந்த சோகம்….!!!

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பட்டி பகுதியில் பெத்தான் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருந்து முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான மகன் முனியப்பனுடன் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குளித்தலை-மைலம்பட்டி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி பெத்தான் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பெத்தான் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தோகைமலை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |