மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டி பகுதியில் காரைபட்டி பகுதியில் அதிவேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் சென்றுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
அதோடு அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவரும் படுகாயமடைந்த நிலையில், உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த துவரங்குறிச்சி காவல்துறையினர் விபத்தில் இறந்த முதியவரின் விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.