ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலம் ஒரு வாரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் அய்யாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி அய்யாதுரை கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார். அந்த சமயம் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அய்யாதுரையின் உடலை தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கீழக்குடிகாடு கொள்ளிட கரையோரம் இருக்கும் புதருக்குள் சிக்கி அழுகிய நிலையில் இருந்த அய்யாதுரையின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.