விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் பிரேம் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூச்சுத்திணறல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எந்தப் பலனும் கிடைக்காத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான பிரேம்குமார் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் பிரேம்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பிரேம்குமாரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பிரேம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.