பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் முருகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு ஆலையில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஆமத்தூர் பேருந்து நிலையத்தில் முருகவேல் நின்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக முருகவேல் நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.