ரயிலில் அடிபட்டு கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிரோடு பகுதியில் தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக தகவல் பரவி வந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் சடலமாகக் கிடக்கும் நபர் அதே பகுதியில் வசிக்கும் சாவித்திரி என்பவரின் கணவரான ராஜா ராமன் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 10 நாட்களாக ராஜாராமன் வீட்டிற்கு வராமல் சுற்றித் திரிந்ததாக சாவித்திரி மற்றும் உறவினர்கள் கூறுகின்றனர். அதன் பின்பு உறவினர்கள் பல்வேறு இடங்களில் ராஜாராமனை தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் தற்போது ராஜாராமன் சடலமாக கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 25 – ஆம் தேதியன்று ராஜாராமன் தண்டவாளத்தைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து காட்பாடி நோக்கி வேகமாக சென்ற சரக்கு ரயிலானது ராஜாராமன் மீது மோதிவிட்டது. இதனால் எதிர்பாராதவிதமாக ராஜாராமன் ரயிலில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.