Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேடி அலைந்த உறவினர்கள்…. சடலமாக மீட்கப்பட்ட முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் முதியவரின் பிணம் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்கபுரம் காலனியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலவை தொழில் செய்து வந்துள்ளார். தற்போது வயது முதிர்வின் காரணமாக வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற மாடசாமி வீட்டிற்கு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாடசாமியை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இதனை அடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மாடசாமி பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாடசாமியின் மகனான பாண்டி என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது தனது தந்தை தான் என்று உறுதி செய்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |