பயணியர் நிழற்குடை அருகில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஈச்சம்பாடி என்ற இடத்தில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. அந்த இடத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக இதுகுறித்து பள்ளிப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிப்பட்டு போலீசார் அந்த முதியவர் யார் என்ற விவரம் குறித்தும், அவர் அந்த இடத்தில் இறந்து கிடந்ததற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.