Categories
தேசிய செய்திகள்

மூச்சு திணறலால் முதியவர் மரணம் : ஆக்ஸிஜன் எங்கே….? ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்….!!

கர்நாடக மாநிலத்தில் முதியவருக்கு சரியாக ஆக்ஸிஜன் வழங்கவில்லை என கூறி ஆம்புலன்ஸ் டிரைவரை அவரது உறவினர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்த 75 வயது முதியவரான ராமையா என்பவர் கொரோனாவால் அறிகுறி இருந்ததால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்படவே, அவரது உறவினர்கள் தனியார் மருத்துவ தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் அழைத்துச்சென்ற மருத்துவமனை ஒன்றில், படுக்கை வசதி இல்லை எனக் கூறி வேறு மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுமாறு அங்குள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சில நிமிடங்களில் உறவினர்கள் ஆம்புலன்ஸிற்கு சென்று பார்க்கையில், முதியவர் ஆம்புலன்ஸ் வாகனத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆம்புலன்சில் ஏன் ஆக்சிஜன் சிலிண்டர்கள், உபகரணங்கள் வைக்கவில்லை என கூறி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே ஓட்டுநர் அளித்த பதில் திருப்த்தி அளிக்காததால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |