Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொம்பேரி பட்டி காடையனிர் பகுதியில் பொன்னுசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிற்று வலி குறையவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பொன்னுசாமி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த வடமதுரை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |