சாலையை கடக்க முயன்ற முதியவரின் மீது பேருந்து மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வகுரம்பட்டி பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் ரெட்டி புதூர் பகுதியில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இவர் ரெட்டி புதூர் பிரிவு ரோடு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சிக்கும் போது, சேலம் நோக்கி நாமக்கல்லில் இருந்து வந்த தனியார் பேருந்து இவரின் மீது மோதி விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட குப்புசாமி உயிருக்கு போராடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புதுச்சத்திரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.