முதியவர் மீது ஆட்டோ மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளிமேடு பேட்டை பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டணம் சந்திப்பில் உள்ள வந்தவாசி சாலையை கடக்க முயற்சித்தபோது அவ்வழியாக வந்த ஆட்டோ இவரின் மீது பலமாக மோதி விட்டது.
இதனால் பலத்த காயமடைந்த ராமமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராமமூர்த்தி பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ரோசனை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.