அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பாறைப்பட்டி பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சாப்டூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.