மர்மமான முறையில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேல ஆவணி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர் ஆனையூர் பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் முதியவர் இறந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.