கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திலேயே முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் செல்லையா என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 24ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் இந்த முதியவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த முதியவர் அத்திப்பட்டு பகுதியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த செல்லையா சிறப்பு சிகிச்சை மையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அம்பத்தூர் எஸ்டேட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.