Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. காயத்துடன் சென்ற முதியவர்…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள லட்சுமியாபுரம் பகுதியில் சின்ன வரதராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் பழைய பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் காலி பாட்டில்களை சேகரிக்க தனது சைக்கிளில் சமத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டார்.

இதனால் தலையில் பலத்த காயத்துடன் வீட்டிற்கு சென்று அவரை உறவினர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதியவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மாரனேரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |