விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் பகுதியில் பால முனியசாமி (வயது 60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடும் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பால முனியசாமி விஷம் குடித்துள்ளார். அதன்பிறகு பால முனியசாமியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு பால முனியசாமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பால முனியசாமியின் மகளான சக்தீஸ்வரி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.