Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களிடம் பேசிட்டு இருக்கும் போதே…. முதியவருக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

நண்பர்களுடன் பேசிக் கொண்டே முதியவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள சத்யமூர்த்தி நகர் பகுதியில் சங்கரன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் சங்கரன் பக்கிங்காம் கால்வாய் மீது உள்ள மேம்பாலத்தில் அமர்ந்து கொண்டு தனது நண்பர்களுடன் பேசியுள்ளார். இதனையடுத்து நண்பர்களுடன் பேசிக் கொண்டே எதிர்பாராதவிதமாக பின்புறம் சாய்ந்ததால் கால்வாய்குள் தவறி விழுந்து விட்டார்.

அதன்பின் அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று சங்கரனை மீட்க முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சங்கரனின் சடலத்தை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |