கிணற்றுக்குள் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கடலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கமலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சிவலிங்கம் கிணற்றுக்கு பக்கத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவலிங்கம் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.