Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மீட்பு பணியில் ஏற்பட்ட சிரமம்… உயிருக்கு போராடிய முதியவர்… தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி…!!

20 அடி ஆழக் குழிக்குள் விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூரில் இருக்கும் அம்மன் நகர், கைலாஷ் நகர் போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக ராட்சச எந்திரங்கள் மூலம் குழி தோண்டும் பணியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் குழி தோண்டும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் வசிக்கும் கைலாசம் என்ற தொழிலாளி கால் தடுமாறி திடீரென 20 அடி ஆழக் குழிக்குள் விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கன்டோன்மென்ட் தீயணைப்பு துறையினர் கைலாசத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் குழிக்குள் மண் சரிவு ஏற்பட்டதால் நீண்ட நேரம் சிரமப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கைலாசத்தை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். அதன்பின் திருச்சி அரசு மருத்துவமனையில் முதியவர் கைலாசம் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சரியான நேரத்தில் சென்று முதியவரின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு படையினரை அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |