Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நான் பிச்சை எடுத்த பணம்…. வேலை இழந்தவர்களுக்கு கொடுங்க…. யாசகரின் கொடை மனசு…!!

 யாசித்து சேமித்த பத்தாயிரம் ரூபாயை வேலை இழந்தவர்களுக்கு கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் கொடுத்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் எனும் பகுதி அருகே அமைந்துள்ள ஆலங்கிணறு என்ற கிராமத்தை சேர்ந்த பூல்பாண்டி என்னும் முதியவர் கடந்த சில ஆண்டுகளாக எல்லா ஊர்களுக்கும் சென்று யாசித்து அதன் மூலம் சேர்க்கும் பணத்தை பள்ளிக்கூடங்களுக்கு தானமாக வழங்குகிறார் . இம்முமுதியவர் தென் பகுதிகளில் சுமார் 400 பள்ளிக்கூடங்களுக்கு இதுவரை நன்கொடை வழங்கியுள்ளார் மற்றும் கல்விக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளார்

இவர் மதுரையில் யாசித்ததன் மூலம் சேர்த்த பணத்தை ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கொடுத்தார் அதனை அடுத்து மதுரை ஆட்சியரிடமும் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் யாசித்து அதனால் 10,000 ரூபாய் சேமித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் வழங்கி அதனை கொரோனாவினால் வேலை இழந்தவர்களுக்கு கொடுக்குமாறு கூறினார்.

இதுபற்றி முதியவர் பூல்பாண்டி கூறுகையில்,”எல்லா பகுதிகளிலும் யாசித்து சேமிக்கும் பணத்தை அப்பகுதிகளில் உள்ள கல்விக்கூடங்களுக்கு வழங்குகிறேன் கொரோனாவினால் வேலை இழந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு உதவுகிறேன் நான் யாசித்து பணம் சேமிப்பதை என் குடும்பத்தினர் விரும்பவில்லை எனினும் தொடர்ந்து இவ்வாறு உதவி செய்வேன்”,  என்று கூறினார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |