கனடா நாட்டில் 8 சிறுமிகள் சேர்ந்து ஒரு முதியவரை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் ரயில் நிலையத்தின் அருகில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் சந்தைப்பகுதியில் 59 வயதுடைய ஒரு முதியவரை சிறுமிகள் எட்டு பேர் சேர்ந்து தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக துணை மருத்துவர்களை அழைத்தனர். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இணையதளம் வழியே சிறுமிகளுடன் அந்த முதியவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நேரில் சந்தித்த போது, அவர்களுக்குள் வாக்குவாதம் அதிகரித்ததில், முதியவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். ஆதாரங்களின்படி, டீன் ஏஜ் வயதுடைய 8 சிறுமிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். சிறுமிகள், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், வரும் 29ஆம் தேதி அன்று மீண்டும் நீதிமன்றம் வருமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.