Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது….? மனநலம் பாதித்த பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கோவையில் பரபரப்பு….!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 28 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென இந்த இளம்பெண் காணாமல் போய்விட்டார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளம்பெண்ணை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். இதனையடுத்து அங்கு பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டிற்குள் உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது முதியவர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உறவினர்கள் வீட்டின் கதவை தட்டியதால் முதியவர் பின்வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் அந்த முதியவர் ஊஞ்சவெலம்பட்டி பகுதியில் வசிக்கும் முருகன் என்பதும் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த அந்த முதியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |