Categories
உலக செய்திகள்

40 வருடங்களாக தனியாக காட்டில் வாழும் அதிசய மனிதர்.. எதற்காக..? அவரே கூறிய சுவாரஸ்ய தகவல்கள்..!!

பிரிட்டனில் ஒரு நபர் 40 வருடங்களாக காட்டில் தனியாக வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த கென் ஸ்மித் என்ற நபர் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் இருக்கும் வனப்  பகுதியில் 40 வருடங்களாக தனியாக வாழ்கிறார். ஒரு மரத்தடி அறைக்குள் மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற எந்த வசதியும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது 74 வயதாகும் இவர், மீன்பிடிப்பது, உணவு தேடுவது, விறகு சேமிப்பது போன்ற பணிகளை செய்கிறார்.

இவர், 26 வயது இளைஞராக இருந்தபோது, எவரின் உதவியுமின்றி தனியாக வாழ ஆசைப்பட்டு  தனிமை பயணத்தை தொடங்கியிருக்கிறார். அப்போது அவருக்கு காடுகள் நிறைந்து இருக்கும் பகுதியில் வாழவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவரின் குடும்பத்தினரை விட்டு சுமார் 22,000 மைல் தூரம் நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார்.

பல மைல்களை தாண்டி சென்ற அவர், இறுதியில் மனிதர்கள் நடமாட்டமில்லாத லோச்சின் என்னும் காட்டுப்பகுதியை பார்த்துள்ளார். எனவே அங்கேயே தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டார். எனினும், அங்கு எரிவாயு, மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆகிய எந்த வசதிகளும் கிடையாது.

செல்போன் சிக்னல்களும் கிடையாது. இது தொடர்பில் கென் ஸ்மித் தெரிவித்துள்ளதாவது, இது அழகான வாழ்க்கை. அனைவருக்கும் இப்படி வாழ விருப்பம் இருக்கும். ஆனால் எவரும் இவ்வாறு வாழ முன் வருவதில்லை. யாரும் இந்த பூமியில் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. கண்டிப்பாக என் கடைசி நாட்கள் வரும் வரை நான் இங்கு தான் இருப்பேன்.

கொடூரமான நிகழ்வுகள் நிறைய எனக்கு நடந்திருக்கிறது. அவை அனைத்தையும் தாண்டி பிழைத்திருக்கிறேன். எனக்கு மீண்டும் நோய் வந்தாலும் 102 வயது வரை உயிரோடு இருப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

Categories

Tech |